search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR birthday celebration"

    • எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கபட்ட திருவ உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    உடுமலை :

    உடுமலையில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தினசரி மார்க்கெட்டில் அண்ணா தொழிற்சங்கம் அண்ணா கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அழைப்பின் பேரில் நகர செயலாளர் ஹக்கீம் தலைமையில் அலங்கரிக்கபட்ட திருவ உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், வி .ஆர். வி. வேலுச்சாமி, பொன்னுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்டத் துணைத் தலைவர் குமார்(எ) தாமோதர சாமி, தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் தொழிலாளர்கள் பரமசிவம் ,சேகர், சசி, சாமிநாதன் , மணியன், கதிரேசன், வீரன், ஈஸ்டர் ராஜ், மீரா, போண்டாமணி, அப்பாஸ், சிவக்குமார், ஆண்டவர், தங்கபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன், விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், நிர்வாகிகள் நிவாஸ், காளிராஜ், அந்தோணி, செந்தில்குமார், ராஜ்குமார், அய்யப்பன், முருகன், குருசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி அரியலூர் தொகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
    • அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, நடிகர் விஜய்கணேஷ், கோவை அழகு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்

    திருப்பூர் :

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. சார்பில் வருகிற 19ந்தேதி முதல் 22-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் தொகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். திருப்பூர் மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

    அதன்படி 19-ந்தேதிஉடுமலை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஈரோடு கே.ரவி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., நடிகர் ரங்கநாதன், குன்னூர் சிவா கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    20-ந்தேதி திருப்பூர் தெற்கு தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வக்கீல் அறிவானந்தம், சக்தி எஸ். பாலன் கலந்து கொண்டு பேசுகின்றனர். தாராபுரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, நடிகர் விஜய்கணேஷ், கோவை அழகு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    21-ந்தேதி காங்கயம் தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தீப்பொறி முருகேசன், கூடலூர் ராமமூர்த்தி, பல்லடம் தொகுதியில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மதுர ஆறுமுகம், காவேரி மணியம் பேசுகின்றனர். 22-ந்தேதி அவினாசி தொகுதியில் தனபால் எம்.எல்.ஏ., கூடலூர் ராமமூர்த்தி, சபாபதி, மடத்துக்குளத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, அமரநாதன், முத்து மணிவேல் பங்கேற்று பேசுகின்றனர்.  

    ×