சங்கரன்கோவிலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி
எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன், விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், நிர்வாகிகள் நிவாஸ், காளிராஜ், அந்தோணி, செந்தில்குமார், ராஜ்குமார், அய்யப்பன், முருகன், குருசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com