என் மலர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா"
- எடப்பாடி பழனிசாமி அரியலூர் தொகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
- அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, நடிகர் விஜய்கணேஷ், கோவை அழகு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்
திருப்பூர் :
அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. சார்பில் வருகிற 19ந்தேதி முதல் 22-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் தொகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். திருப்பூர் மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
அதன்படி 19-ந்தேதிஉடுமலை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஈரோடு கே.ரவி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., நடிகர் ரங்கநாதன், குன்னூர் சிவா கலந்து கொண்டு பேசுகின்றனர்.
20-ந்தேதி திருப்பூர் தெற்கு தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வக்கீல் அறிவானந்தம், சக்தி எஸ். பாலன் கலந்து கொண்டு பேசுகின்றனர். தாராபுரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, நடிகர் விஜய்கணேஷ், கோவை அழகு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
21-ந்தேதி காங்கயம் தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தீப்பொறி முருகேசன், கூடலூர் ராமமூர்த்தி, பல்லடம் தொகுதியில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மதுர ஆறுமுகம், காவேரி மணியம் பேசுகின்றனர். 22-ந்தேதி அவினாசி தொகுதியில் தனபால் எம்.எல்.ஏ., கூடலூர் ராமமூர்த்தி, சபாபதி, மடத்துக்குளத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, அமரநாதன், முத்து மணிவேல் பங்கேற்று பேசுகின்றனர்.






