search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mercedes Benz E Class"

    இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் புதிய மைல்கல் படைத்திருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் இந்திய சந்தைக்கான 1,00,000 யூனிட் தயாரித்திருக்கிறது. இ-கிளாஸ் செடான் மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 1,00,000 யூனிட்டாக வெளியிடப்பட்டுள்ளது. 

    மெர்சிடிஸ் நிறுவன தலைவர், தலைமை செயல் அதிகாரியான ரோலன்டு ஃபோல்கர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன செயல் இயக்குனர் பியூஷ் அரோரா தயாரிப்பு ஆலையில் இருந்து 100,000 யூனிட் இ-கிளாஸ் செடானை வெளியிட்டனர்.

    இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு 1,00,000 யூனிட் வெளியீடு மிகச்சிறந்த உதாரணம் ஆகும் என ரோலன்ட் ஃபோல்கர் தெரிவித்தார். 



    மேலும் 1,00,000 யூனிட் முந்தைய மற்றும் தற்போதைய மெர்சிடிஸ் இந்தியா ஊழியர்களின் அயராத உழைப்புக்கான ஊதியம் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் மெர்சிடிஸ் தயாரிப்புகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து பார்க்கும் போது அடுத்த மைல்கல் சாதனையை மிக விரைவில் எட்டுவோம் என அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் 1,00,000 யூனிட் வெளியாகி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தை பரைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. என பியூஷ் அரோரா தெரிவித்துள்ளார். எவ்வித தயாரிப்பு இலக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மேலும் எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
    ×