என் மலர்
நீங்கள் தேடியது "Membership form"
- தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது.
- முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட 56 புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை செய்தித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் காங்கயம் தெற்கு ஒன்றியம் சார்பில் முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட 56 புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரிடம் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் படியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முக சுந்தரம் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது. பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அவைத் தலைவர் சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் கேத்தனூர் அரிகோபால் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் நகரம், பல்லடம் வடக்கு, தெற்கு, ஒன்றியங்கள், பொங்கலூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.






