search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mappillayurani Panchayat"

    • மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி ஊராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசினார்.
    • கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி யூனியன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்தாக உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் கணேசபுரம் அங்கன்வாடி மையம் அருகில் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், மகேஸ்வரி காமராஜ், உமாமகேஸ்வரி தங்கபாண்டி, ஜீனத்பீவி, தங்கமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசுகையில், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், சாலை வசதி, மின்விளக்கு வசதி உட்பட அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும், மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மாப்பிள்ளை யூரணி ஊராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பின்னர் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சிலுவைப்பட்டியில் கட்டப்பட்டு வரும் 526 புதிய வீடுகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்களுக்கு ஒதுக்க வேண்டும், ஊராட்சி பகுதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சுகாதார ஆய்வாளர்கள் பிரதீப்குமார், முகமது ஆசிக் அரபி, கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன் மற்றும் திரளான பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி,ஜீனத்பீவி,பாரதிராஜா,அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி,சக்திவேல், ராணி,வசந்தகுமாரி,பாண்டியம்மாள்,மிக்கேல் அருள் ஸ்டாலின்,உமாமகேஸ்வரி, தங்கமாரிமுத்து,ஜேசுராஜா, ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துகுடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.

    சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள்,புதிய சாலை அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும்

    தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பேசினார்.

    மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பிள்ளையூரணி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஊராட்சித் தலைவர் சரவணகுமார் பட்டியலிட்டு பேசினார்.

    ×