search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mambalam"

    மேற்கு மாம்பலத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜூ.

    இவரது மகன் தமிழ்செல்வன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். தமிழ்செல்வன் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 4 பாடங்களில் பெயிலாகி விட்டார்.

    இதனால் தந்தை ராஜூ தமிழ்செல்வனை கண்டித்தார். மேலும் தற்போது அரையாண்டு தேர்வு எழுதியுள்ள தமிழ்செல்வன் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் படுக் கையறையில் தமிழ்செல்வன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமாபுரம் அம்பாள் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். பிளாஸ் டிக்கம்பெனி ஊழியர். இவரது மனைவி நதியா(30) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.

    நதியாவுக்கு கணவர் ரமேசுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கையறையில் நதியா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்குப் பதிவு செய்தார்.

    திருமணம் முடிந்து 6½ ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #PuducherryExpress #Gundi #Mambalam #SouthernRailway
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.

    இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×