search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malaikottai thayumanavar temple"

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 14-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து 15-ந்தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று காலை நடராஜர் தரிசனம் நடைபெற்றது.

    நேற்று மதியம் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடை பெற்றது. பின்னர் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) காலை திருக்குறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமியும், பல்லக்கில் அம்மனும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாயுமான அடிகள் உற்சவமும், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு 7 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும், நாளைமறுநாள்(திங்கட்கிழமை) இரவு பிச்சாடணார் வீதிஉலாவும் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி இரவு சண்டிகேஸ்வரர் வீதிஉலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் இது. ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    பல்வேறு சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 14-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவளது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியும், 15-ந்தேதி மதியம் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 4.55 மணிக்கு கோவிலில் இருந்து சாமி புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள்வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு சப்பரத்திலும், சுவாமி-அம்பாள் (சோமாஸ் கந்தராக) சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 5.45 மணிக்கு மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள்.

    இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 5.55 மணியளவில் சுவாமி தேரும், 6.10 மணியளவில் அம்மன் தேரும் நிலையில் இருந்து புறப்பட்டது. இதில் வாத்தியங்கள் முழங்க, யானை முன்னே செல்ல திரளான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மலைக்கோட்டை வெளி வீதியில், பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தவாறு சென்றது. 10.50 மணிக்கு அம்மன் தேரும், 11 மணிக்கு சுவாமி தேரும் நிலையை சென்றடைந்தன. இந்த தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும், சிலம்பம், கத்தி சண்டை போட்டவாறும், சாமி வேடமணிந்து நடனம் ஆடியும் மற்றும் சிவனடியார்கள் பாடல்களை பாடிக்கொண்டும், பெண்கள் கைகளில் நந்தி கொடியுடன் ஆடிப்பாடிக் கொண்டும், சாம்பிராணி வாசனையுடன் புகை போட்டுக் கொண்டும் தேருக்கு முன்னால் சென்றனர்.

    தொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் அங்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சாமியை வழிபட்டனர். பின்னர் இரவில் தேரில் இருந்து சுவாமி-அம்பாள் இறங்கி கோவில் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தனர்.

    தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர் சென்ற பகுதிகளில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடராஜர் தரிசனமும், பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவ பக்தியில் சிறந்து விளங்கிய ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவளுடைய தாய் வடிவில் வந்து பிரசவம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.

    இதனால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 14-ந்தேதி செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயாக வந்து பிரசவம் பார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. காலை 5.53 மணிக்கு மேல் மீன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு, சுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு, அவளுடைய தாய் வடிவில் வந்து சிவபெருமான் சுகப்பிரசவம் செய்த தலம், ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இத்தனை சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா, கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ஆம் நாளான நேற்று காலை நூற்றுக்கால் மண்டபத்தில், சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிந்த உடன் கொடுக்கப்பட்ட மருந்தை பிரசாதமாக பெற்றனர். இந்த மருந்தை முறையாக சாப்பிட்டால், அந்த தம்பதிக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மாலையில் அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதிக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு (சிம்ம வாகனத்தில்) நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் புறப்பாடு செய்யப்படுகிறது. வருகிற 18-ந்தேதி காலை 4.55 மணிக்கு மேல் 5.53 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    இத்தனை சிறப்புவாய்ந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் கன்யா லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இரவு சுவாமி-அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி பூதம் வாகனத்திலும், அம்பாள் கமலம் வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 13-ந்தேதி சுவாமி கைலாசபர்வதம் வாகனத்திலும், அம்பாள் அன்னவாகனத்திலும் புறப்பாடு செய்யப்படுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு செட்டிபெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று மாலை அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வருகிற 15-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 16-ந்தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும், 17-ந்தேதி சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் புறப்பாடாகி, வேடுபறி காணும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 18-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 4.55 மணிக்கு மேல் 5.53 மணிக்குள் திருதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தேர்கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடையும்.

    வருகிற 19-ந்தேதி காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. 20-ந்தேதி காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், அன்று இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும், புறப்பாடு செய்யப்படுகிறது.

    வருகிற 21-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம் மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறகிறது. வருகிற 22-ந்தேதி இரவு பிச்சாடணார் வீதிஉலாவும், 23-ந்தேதி இரவு சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி பிரயாசித்தல் அபிஷேகம் ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.
    மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானை ஒரு வாகனத்திலும், அம்பாள், சுவாமி-அம்பாள் ஒரு வாகனத்திலும் புறப்பாடாகி தெப்பக்குளம் வந்தடைந்தனர்.

    மதியம் தெப்பக்குளத்தில் அனைத்து விதமான அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மீண்டும் புறப்பாடாகி ஆண்டார் வீதி, சறுக்குப்பாறை வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

    பின்னர் மலைக்கோட்டையில் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து கோவில் குருக்களை கோவில் முன்பு இருந்து மரியாதை செய்யும் விதமாக இரவு 12 மணியளவில் யானை மீது அமர வைத்து அவரது வீட்டில் கொண்டு போய் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் 7 மணிக்கு பல்வேறு வகையான வாகனத்தில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை சுற்றி வந்து தெப்பக்குளத்தில் தயார் நிலையில் இருந்த தெப்பத்தில் இரவு 7.55 மணிக்கு எழுந்தருளினர். குளத்தை 5 முறை தெப்பம் சுற்றி வந்தது. பின்னர் தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமியும்-அம்பாளும், பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி-அம்பாள் மீண்டும் வெளியில் வந்தனர். பின்னர் நந்திகோவில் தெரு, ஆண்டார்வீதி, சறுக்குப்பாறை வழியாக இரவு 12 மணியளவில் கோவிலை சென்றடைந்தனர். விழாவையொட்டி தெப்பக்குளத்தின் நடு பகுதியில் உள்ள நீராழி மண்டபம் உள்பட தெப்பக்குளம் சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் தெப்ப உற்சவத்தை பக்தர்கள் பார்க்க வசதியாக தெப்பக்குளத்தை சுற்றியும் போடப்பட்டிருந்த அனைத்து தரைக்கடைகளும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டது.

    இன்று காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி(தெப்பக்குளம்) கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் கி.பி.16-ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.

    இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தெப்ப திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடி, தாயுமானசுவாமி கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க வீதி உலா கொண்டு செல்லப்பட்டு, மலையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவில் கம்பத்தடி மண்டபம் சென்றடைந்தது. பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் தாயுமானவர், தாயுமானவர் பிரியாவிடை மட்டுவார்குழலம்மை, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு முக்கிய பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து தங்க கொடி மரத்தில் தாயுமானசுவாமியின் கொடி ஏற்றப்பட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் சுவாமி கேடயம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.



    இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 20-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 21-ந்தேதி பங்குனி உத்திரத்தையொட்டி அன்று காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை பூர்வாங்க பூஜைகளுடன் கணபதி ஹோமம், ரிஷப யாகம் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தினமும் காலை பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு பூத வாகனம், மயில்வாகனம், கைலாச வாகனம், அன்னவாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 5-ம் நாள் திருவிழாவான 16-ந் தேதி இரவு 7 மணிக்கு தனித்தனி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 21-ந் தேதி தீர்த்தவாரியும், மாலையில் நடராஜர் புறப்பாடு மற்றும் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி பிச்சாடனார் புறப்பாடும், இரவு 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும்் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும்.

    செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். மேலும் கார்த்திகை தீபத்திற்காக திரி தயாரிக்கும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இதில் 300 மீட்டரில் தயாரிக்கப்படும் திரியை பணியாளர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள கொப்பரையில் வைப்பார்கள்.

    பின்னர் அதில் தயார் நிலையில் உள்ள 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றுவார்கள். இந்த எண்ணெய்யை திரி நன்றாக உறிஞ்சும். இந்த பணிகள் ஒரு சில நாட்களில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×