search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா நிறைவு
    X

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா நிறைவு

    மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.
    மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானை ஒரு வாகனத்திலும், அம்பாள், சுவாமி-அம்பாள் ஒரு வாகனத்திலும் புறப்பாடாகி தெப்பக்குளம் வந்தடைந்தனர்.

    மதியம் தெப்பக்குளத்தில் அனைத்து விதமான அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மீண்டும் புறப்பாடாகி ஆண்டார் வீதி, சறுக்குப்பாறை வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

    பின்னர் மலைக்கோட்டையில் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து கோவில் குருக்களை கோவில் முன்பு இருந்து மரியாதை செய்யும் விதமாக இரவு 12 மணியளவில் யானை மீது அமர வைத்து அவரது வீட்டில் கொண்டு போய் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.

    Next Story
    ×