என் மலர்
நீங்கள் தேடியது "lokesh kanagara"
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
முன்னதாக கூலி படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'லியோ' திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலரை ரோகிணி திரையரங்கின் பார்க்கிங்கில் வெளியிட காவல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்று கோயம்பேடு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






