search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lokesh"

    • சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அமராவதியில் உள்வட்ட சாலை சீரமைப்பு பணியில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது லோகேஷ் தனது தந்தையை ஜாமீனில் வெளியே எடுக்க டெல்லியில் தங்கி உள்ளார். அவர் டெல்லியில் இருந்து வந்ததும் கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் லோகேஷ் முன்ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மதிப்பிருக்க முடியும்? என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben
    அமராவதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி ‘லோகேஷின் தந்தை’ என்று கிண்டலாக கூறினார்.

    இதனால், ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி பெயரை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார்.

    ‘நான் ஒரு குடும்பஸ்தன். எனது குடும்பத்தாரை நான் மிகவும் நேசிக்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், பிரதமர் மோடிக்கு மனைவியும் இல்லை, குடும்பமும் இல்லை. ஆனால், இன்று அவர் என்னுடைய மகனை குறிப்பிட்டு பேசியதால் மோடியின் மனைவியைப்பற்றி நான் இப்போது பேச வேண்டியுள்ளது. 

    மக்களே!,  நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனைவியின் பெயர் ஜசோதாபென். திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மரியாதை இருக்க முடியும்?’ என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாட்டையும் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளையும் பிரதமர் மோடி சீரழித்து வருவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, மோடி இன்று குண்டூரில் பேசிய பொதுக்கூட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுத்து அந்த கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

    இதன் மூலம் மோடியின் ஆந்திர மாநில சுற்றுப்பயணம் தோல்வியில் முடிந்துள்ளது. மோடியின்  பா.ஜ.கவை இங்குள்ள மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பது அவருக்கு நன்றாக புரிந்து விட்டது. தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடத்தை உரிய நேரத்தில் கற்பிப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben 
    ×