என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha member"

    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் டெல்லியில் மத்திய மந்திரி முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். #TMC #LokSabha #TMCLokSabhaMP
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிக்கு பாராளுன்ற மக்களவையில் 34 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 உறுப்பினர்களும் உள்ளனர்.


    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிஷ்னுபூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான சவுமித்ரா கான் டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது மேற்கு வங்காளம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவர் முகுல் ராய் உடனிருந்தார். #TMC #LokSabha #TMCLokSabhaMP #SoumitraKhan #BJP #joinsBJP
    பிஜு தனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.

    அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
    ×