என் மலர்
நீங்கள் தேடியது "Liquor bars sealed"
- அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்து அனுமதி வழங்கப்படும்.
- 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு முதல் நிதி ஆண்டான மார்ச் 31-ந் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 கடைகளும் உரிமத்தை புதுப்பிக்க வில்லை.
இதையடுத்து கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.
- தேனி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகில் இருந்த மதுகூடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- அனுமதி பெறாமல் நடத்தி வந்த 11 மதுபார்களுக்கு சீல் வைத்தனர்.
தேனி:
மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலா ளர் தலைமையில் 3 குழுவி னர் தேனி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகில் இருந்த மதுகூடங்க ளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அனுமதி பெறாமல் நடத்தி வந்த 11 மதுபார்களுக்கு சீல் வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வண்ணம் மறு ஒப்பந்தத்தில் அதிகபடியான மது கூட ங்களை எடுத்து முறையாக அரசு அனுமதி பெற்று மது கூடங்கள் நடத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.






