புதுச்சேரியில் 14 ரெஸ்டோ பார்களுக்கு திடீர் `சீல்' வைப்பு- கலால்துறை அதிரடி

அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்து அனுமதி வழங்கப்படும்.15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
புதுச்சேரியில் 14 ரெஸ்டோ பார்களுக்கு திடீர் `சீல்' வைப்பு- கலால்துறை அதிரடி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு முதல் நிதி ஆண்டான மார்ச் 31-ந் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 கடைகளும் உரிமத்தை புதுப்பிக்க வில்லை.

இதையடுத்து கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.

இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com