search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lalu prasadh yadhav"

    • சரத் பவார் உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள்.
    • 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல.

    மகாராஷ்டிர மாநில சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.

    அப்போது மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், "சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்சிபியின் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இது புதிய தலைமுறையை உயர்த்த அனுமதிக்கிறது. சரத் பவார் உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.

    அப்போது அஜித் பவாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையல் சரத் பவார் பேசினார். அவர், "தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது" என தெரிவித்தார்.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தனது மாமா சரத் பவாரின் வயது குறித்து கிண்டல் செய்ததற்கு பதிலளித்த பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ், "அரசியலில் ஓய்வு இல்லை" என்று கூறினார்.

    இன்று மருத்துவப் பரிசோதனைக்காக புதுதில்லிக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், "அஜித் பவார் சொல்வதால் மட்டும் சரத் பவார் ஓய்வு பெறுவாரா? ஒரு முதியவர் அரசியலில் ஓய்வு பெறுவாரா? அரசியலில் ஓய்வு இல்லை" என்று கூறினார்.

    • சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.
    • சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர்கள் லாலு பிரசாத் யாதவை அழைத்துச் சென்றனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றும் சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டு தீப்பிடித்த மின்விசிறி அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ×