என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasekaranatha Swamy Temple"

    • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருநாள் கொண்டாடபட்டு வருகிறது.
    • கோ ரதத்தில் முக்கிய ரதவீதிகளில் சுவாமி- அம்பாள் பவனிவந்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருநாள் கொண் டாடபட்டு வருகிறது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை, அதனை தொடர்ந்து காலை, மாலை இரவு வேளையில் சுவாமி, அம்பாள் வாகனத்தில் ஏழுந்தருளி வானவேடிக்கையுடன் திருவீதி உலா என நிகழ்ச்சி களை மண்டகப்படிதார் நிகழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 7-ம் திருநாளான நேற்று சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கி மாலை பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதி உலாகாட்சியும், தொடர்ந்து கோ ரதத்தில் முக்கிய ரதவீதிகளில் சுவாமி- அம்பாள் பவனிவந்தனர்.

    கோ ரதத்தை வடம்பிடித்து இழுத்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு ரதவீதிகளின் வழியாக உலா வந்த காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இரவு 10.30 மணியளவில் சுவாமி- அம்பாள் பல்லக்கில் பவனி வருதல், நடராஜர் வெள்ளை சாத்தி சப்பரத்தில் பவனிவருதல் நடந்தது. நிகழ்ச்சியில் பஞ்சவாத்தியம் ழுழங்க திருவீதி உலா காட்சி நடைபெற்றது.

    ×