search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
    X

    குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

    • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×