என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kills teenager"
- எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.
- உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயுடன் விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.