ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி- தாய் படுகாயம்

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
ராஜ்குமார் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி. (உள்படம்: பலியான ராஜ்குமார்)
ராஜ்குமார் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி. (உள்படம்: பலியான ராஜ்குமார்)
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயுடன் விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பலத்த காயமடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com