search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunjeeragam"

    நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள் கருஞ்சீரகம். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.
    நம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.

    தலைமுதல் பாதம் வரை நம் வெளி மற்றும் அக உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நான் கடந்த 25 ஆண்டுகளாக கருஞ்சீரகத்தை பயன்படுத்தி பல்வேறு வியாதிகளை முழுமையாக குணப்படுத்திய அனுபவத்தை பலகோடி மக்களுடன் பகிர்ந்துகொள் கிறேன்.

    கண், காது, மூக்கு, பல், தொண்டை நலன் காக்க கருஞ்சீரகம்:

    கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவை தேவைக்கேற்ப, கேரட், பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, கடல்பாசி இவைகளின் சாறுகளுடன் கலந்து குடித்தால் கண்குறைகள் ஏற்படாது குறைகள் சரியாகும். கருஞ்சீரகத்தை தூதுவளை சாற்றில், சூப்பில், ரசத்தில் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் காது, மூக்கு, சுவாசமண்டலம் குறைகள் முற்றிலும் சரியாகும். வல்லாரை, சங்குபுஷ்பம் சாற்றில் கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.

    பல் வலி, சிதைவு, கூச்சம், பழுது நீங்க கருஞ்சீரகம்:

    கருஞ்சீரகப்பொடி (அ) எண்ணெயுடன் இந்து உப்பு, திரிபலா, லவங்கம், சுத்தமான கரித்தூள், ஆலம்பட்டை பொடிகளை கலந்து நமது கையால் பல்லை காலை, மாலை தேய்த்து வந்தால் பல் பலமாவதுடன் குறைகள் முழுமையாக சரியாகும். பல் ஈறுகளில் தோன்றும் ரத்தக்கசிவு சரியாகும். சொத்தை பல் உருவாகாது.

    நாக்கு, தொண்டைபுண்கள், உதட்டு பிரச்சினைகள் குணமாக:

    சிறிதளவு கருஞ்சீரக எண்ணையுடன் நல்ல எண்ணை ஒரு சிறிய தேக்கரண்டி கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பெரும் பலன்கள் கிடைக்கும்.

    தோல்:

    நமது உடல் உறுப்புகளில் தோல்தான் பெரிய உறுப்பும், உடலுக்கு பாதுகாப்பும். கருஞ்சீரகம் நமது தோலில் ஏற்படும் பலகுறைகளை முற்றிலும் சரிசெய்கிறது. சொரியாசிஸ், அக்சீமா, வெண்புள்ளிகள், தழும்புகள், கட்டிகள், கொப்புளங்கள், அரிப்பு, சொறி சிறங்குகள் அனைத்துக்கும் அதற்கான மூலிகைகளுடன் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்தால் மிக விரைவாக பலன் கிடைக்கிறது. முற்றிலும் குணமாகிறது. கருஞ்சீரக எண்ணெயுடன் வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பரங்கிபட்டை தைலம், ரோஸ்மேரி, டீட்ரீ, ஓரிகானோ, பாதாம், ஆப்ரிகாட், அவகாடோ போன்ற எண்ணெய்களை முறையாக கலந்து பூசி வர அற்புதமான பலன்களை பெறலாம்.

    கற்றாழை சாறில் கருஞ்சீரக எண்ணெய், வேப்ப எண்ணெய் சிறிதளவு கலந்து குடித்தால் நமது தோலின் செல்கள் புதுப்பிக்கபடுகின்றன. இறந்த செல்கள் வெளியேற்றப்படு கின்றன. தோலில் பூஞ்சைகள் ஏற்படாமல் கருஞ்சீரகம் பாதுகாக்கிறது. நமது தோலின் பல்வேறு செயல்களையும் கருஞ்சீரகம் முழுமையாக பாதுகாக்கும் தன்மை கொண்டது.

    கருஞ்சீரக் எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

    கருஞ்சீரக எண்ணெயுடன் சதுரகல்லி சாறு சேர்த்து மஞ்சள் கலந்து தோலின் மீது பூசி குளிர்ந்த நீரில் குளித்தால் பல்வேறு சரும நோய்களும் சரியாகும். இதுபோன்ற சரும நோய்களுக்கு இயற்கையில் மிக அற்புதமான தீர்வுகள் நிறைய உள்ளன. அனைத்து வகை தோல் பிரச்சினைகளையும் சரிசெய்ய முழுமையாக குணப்படுத்த மிக முக்கியமான பெருங்குடல், நுரையீரல் மற்றும் ரத்தத்தை சுத்திகரிப்பது இன்றியமையாதது. உண்ணும் உணவுகளின் மூலமாக, அருந்தும் தண்ணீரின் மூலமாக எப்படி இதுபோன்ற உடல் குறைகளை சரிசெய்வது என்பதை பார்க்கலாம். கருஞ்சீரகத்தின் தன்மைகளையும் உபயோகிக்கும் முறைகளையும் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

    இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பிரமிக்கும் வகையில் கருஞ்சீரகத்தின் தன்மைகள் உள்ளன. நம் தெய்வீக புலவரின் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வாக்கியத்துக்கு இணங்க நோயின் தன்மை அறிந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை முற்றிலும் சரிசெய்ய கருஞ்சீரகம் பெரிதும் பயன்படுகிறது.

    நம் உடலின் செல்களுக்கு பெரிதும் தேவையான உணவாக கருஞ்சீரகம் உள்ளது. உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், கழிவுகள் தேங்காமல் பார்த்துகொள்ளவும் புது செல்கள் உருவாகவும், செல்களை புதுப்பிக்கவும் கருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. எனவே நமது வருங்கால சந்ததியினர்களுக்கு இதுபோன்ற அறிய மூலிகை உணவுகளை பற்றிய விழிப்புணர்வை அதிகமாக உருவாக்கும் கடமை நமக்கு உள்ளது. குறிப்பாக இப்போதுள்ள இளைஞர்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.

    நமது 12 உறுப்புகளிலும் அவற்றின் துணை உறுப்புகளிலும் ஏற்படும் குறைகளையும், ஆண், பெண் பாலின குறைகளையும் நம்மை பெரிதும் பாதித்துள்ள நீரிழிவு, மூட்டுவாதம், முடக்குவாதம், எலும்பு, நரம்பு மண்டலங்களின் குறைகள், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றிற்கும், பெண்களின் கருப்பை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைபேரின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளுடன் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி மேலும் பல மூலிகைகளின் உதவியுடன் ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலையை தெரிந்துகொள்வோம்.

    மருத்து மாத்திரைகள், ஊசிகள் இன்றி இயற்கை மூலிகைகளின் துணையுடன், அடுப்பு நெருப்பு இல்லாத இயற்கை உணவுகளின் துணையுடனும் முழுமையான ஆரோக்கியத்தை பெறலாம்.
    சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு.
    நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிற சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மருந்தாக பயன்படுகிற கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே தினசரி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

    மருந்து என்பது அதன் சேர்மானப் பொருட்களை சரியான அளவில் எடுத்து, குறிப்பிட்ட மருத்துவ முறையில் தயார் செய்து, குறிப்பிட்ட நோய்களுக்கு, சரியான அளவுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதால் அதுபோன்ற மருத்துவ குணமுடைய பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

    கருஞ்சீரகத்தின் பெருமைகள்

    * கருஞ்சீரகப் பொடியினை காடியுடன் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும். இதனையே 3 முதல் 7 நாட்கள் வரையில் காலை 1/2 கிராம், மாலையில் 4 கிராம் வீதம் Rabies என்கிற வெறிநாய்க்கடி மற்றும் இதர நச்சுக்கடிகளின் நஞ்சை நீக்குவதற்கும் கொடுக்கலாம்.

    * கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.

    * நொச்சி குடிநீருடன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டுவிட்டு வருகிற சுரம் தணியும்.

    * கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.

    * கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

    * கருஞ்சீரகத்தின் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி போன்றவை தீரும்.

    * கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்.

    * சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவிவர முகப்பரு மறையும்.

    * இதை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.
    ×