என் மலர்
நீங்கள் தேடியது "Kalligudi"
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 50). இவர் சம்பவத்தன்று விருதுநகருக்கு சென்று விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.
நல்லமநாயக்கன்பட்டி விலக்கில் இறங்கி வீட்டுக்கு செல்ல மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சுப்பு லட்சுமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சுப்புலட்சுமியை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்புலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கொக்கலாஞ்சேரியை சேர்ந்த பாலசுப்பிர மணி மகன் விக்கி என்ற சங்கிலி முருகனை(18) கைது செய்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி கலைச்செல்வி.
சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ,1000-த்தை திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்து கலைச் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலைச் செல்வி வீட்டில் நகை, பணம் திருடியது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகக்கண்ணன் (வயது 27) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.






