search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallar Vettu Festival"

    • இந்த ஆண்டு திருவிழா நேற்று யாகசாலை பூஜை, பூ கையில் இருந்து புனித நீர் எடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் தொடங்கியது.
    • அடுத்த மாதம் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக் குடியிருப்பு குதிரை மொழி தேரியில் அமைந் துள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட் டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இங்கு வருடம் தோறும் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். அதே போல் இந்த ஆண்டு திருவிழா நேற்று யாகசாலை பூஜை, பூ கையில் இருந்து புனித நீர் எடுத்து சுவாமி களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் தொடங்கியது.

    பகல் 2 மணிக்கு ஆலயத் திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும், தினசரி மாலையில் வில்லிசையும் தொடர்ந்து நடைபெறும். அடுத்த மாதம் 14-ந்தேதி (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு ஐவர்ராஜா பாலையம்மன் பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாகாப்பு தீபாராதனையும் நடைபெறும். மறுநாள் டிசம்பர் 15 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 10 மணிக்கு மகளிர் கோலம் போடும் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் உற்சவர் வீதி உலா வருதல் நடக்கிறது.

    16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல், காலை 9 மணிக்கு தாமிர பரணி தீர்தம் வெள்ளி குடத்தில் எடுத்துவந்து ஊர் எல்லையில் இருந்து யானை மீது வைத்து வானவேடிக்கை, மேள தாளத்துடன் ஊர்வலமாக வருதல், தொடர்ந்து பேச்சி யம்மன்னுக்கு முளைபாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    இதைக்காண பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கூடுவார்கள். கள்ளர்வெட்டுநடந்த இடத்தில் இருந்து புனித மணலை எடுத்து வீடுகளுக்கு சென்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய் வார்கள்.

    சுப நிகழச்சிகள் நடக்கும் போது இந்த மணலை பயன் படுத்துவார்கள். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அடுத்த மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து குடும்பத்துடன் வந்து, கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநி லையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, தக்கார் தமிழ்செல்வி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஆலய ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலையம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெறும்.

    டிசம்பர் 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெண்கள் கோலமிடுதல் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் உற்சவர் வீதி உலா நடக்கிறது.

    டிசம்பர் 16-ந்தேதி காலை 6 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிகுடத்தில் எடுத்துவந்து ஊர் எல்லையில் இருந்து யானை மீது வைத்து வாண வேடிக்கை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தொடர்ந்து பேச்சிய ம்மன்னுக்கு முளைப்பாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×