search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therikudiripu"

    • தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மாலையில் வில்லிசை நடக்கிறது.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலையம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெறும்.

    டிசம்பர் 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெண்கள் கோலமிடுதல் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் உற்சவர் வீதி உலா நடக்கிறது.

    டிசம்பர் 16-ந்தேதி காலை 6 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், காலை 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிகுடத்தில் எடுத்துவந்து ஊர் எல்லையில் இருந்து யானை மீது வைத்து வாண வேடிக்கை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    தொடர்ந்து பேச்சிய ம்மன்னுக்கு முளைப்பாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×