என் மலர்

  நீங்கள் தேடியது "Kajal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்கொடை திரட்ட நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டிருக்கிறார். #KajalAggarwal #Kajal #Marathon
  காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டை எதிர் பார்த்துள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ந்தேதி தொடங்கியது. விரைவில் காஜல் படக்குழுவுடன் இணைய உள்ளார்.

  டாடா கண்சல்டன்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் இந்தி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

  16-வது முறையாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டு 10 கிமீ., தூரம் ஓடியுள்ளார். பழங்குடியினருக்கு விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், திறமைவாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

  திங்க் பீஸ் அமைப்பு இதை ஒருங்கிணைத்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.  மாரத்தானில் கலந்து கொண்டது குறித்து காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இது எனது இரண்டாவது மாரத்தான். பத்து கிலோ மீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் கடந்துள்ளேன். கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாகவே இலக்கை அடைந்துள்ளேன்.

  தற்போது இலக்கைக் குறிவைத்தல், உறுதியோடு இருத்தல், உடல்நிலையைச் சீராக வைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் ஓட வேண்டும். திங்க் பீஸ் அமைப்பிற்கு ஆதரவளித்து நன்கொடைகளைத் திரட்ட வேண்டும். பழங்குடியின மக்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஊக்கமளிக்க வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், இந்த முறை அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்தே ஆவேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார். #KajalAggarwal
  மும்பை அழகியான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.

  பின்னர் தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்திலும், தமிழில் ‘பழனி’ என்ற படத்திலும் நடித்தார். ராஜ மவுலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

  அதிலிருந்து இப்போது வரை அவருக்கான கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

  பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது.  ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

  ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால், அடுத்ததாக சரித்திர, புராண படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KajalAgarwal
  சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவந்த பத்மாவத் படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்து ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை மணிகர்னிகா என்ற பெயரில் தயாராகிறது.

  இந்தியில் மகாபாரதம் கதையை படமாக்கும் வேலைகள் நடக்கின்றன. இதுபோல் ராமாயணமும் சினிமா படமாகிறது. இதை அனிமேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற பார்கவ் டைரக்டு செய்கிறார். மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்கின்றனர்.

  பார்கவ் கூறும்போது, “ராமாயண கதையை ஏற்கனவே நிறைய பேர் படமாக்கி உள்ளனர். நான் அதில் வரும் ராவணன் சகோதரி சூர்ப்பனகை அத்தியாயத்தை மட்டும் பிரதானமாக வைத்து புதிய படத்தை எடுக்கிறேன். இளவரசியாக வாழ்ந்த சூர்ப்பனகையின் வாழ்க்கை, ராமன் மீதான ஆசை, இதனால் சீதை கடத்தப்பட்ட சம்பவம், ராமன்-ராவண யுத்தம் போன்றவை படத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சூர்ப்பனகை கதாபாத்திரம் அழகாக காட்டப்படும்” என்றார்.

  இந்த படத்தில் சூர்ப்பனகை வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. காஜல் அகர்வாலை சந்தித்து கதை சொல்லி உள்ளனர். அவருக்கும் கதை பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்டோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  காஜல் அகர்வாலுக்கு இன்னும் அதுபோல் கதைகள் அமையவில்லை. சூர்ப்பனகையாக நடிக்க அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது ‘குயின்’ இந்தி படத்தின் தமிழ் பதிப்பான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரிஸ் பாரிஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக காஜல் அகர்வால் இரண்டு புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #KajalAgarwal
  காஜல் அகர்வாலின் சினிமா வாழ்க்கையில் இது 10ம் ஆண்டு. இதுவரை கதாநாயகர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்தவர் பாரிஸ் பாரிஸ் படம் மூலம் தனி கதாநாயகியாகவும் மாறி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் காஜல் அடுத்தடுத்து 2 தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார்.ராணா நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படத்தை இயக்கிய தேஜா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளார். 

  இது தவிர சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக இருக்கும் காஜல் அகர்வால், தனது மார்க்கெட்டை தக்க வைக்க புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #KajalAgarwal
  காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் வந்தன. அவற்றில் இரண்டு படங்கள் விஜய், அஜித்குமாருடன் நடித்தவை.

  சீனியர் நடிகர்களுடன் இதுவரை ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் இப்போது இளம் கதாநாயகர்களை தேடுகிறார். இது மார்க்கெட்டை தக்க வைக்கும் தந்திரமாம். இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

  ‘‘நான் அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி இருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன். 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதிர்ஷ்டம் இல்லாமல் இதெல்லாம் நடக்காது. என் திறமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துகிறேன்.

  தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக படங்கள் வருகின்றன. இந்த இரு மொழி ரசிகர்களுமே என்னை வட இந்திய நடிகையாக பார்க்காமல் தங்கள் சொந்த மாநிலத்து பெண் போல நேசிக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது.   சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்கிறேன். இளம் கதாநாயகன் சர்வானந்த். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரோடு ஜோடி சேர்வது உங்கள் தகுதிக்கு சரியானதா? என்று பலரும் கேட்கின்றனர். காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்து இருக்க முடியும். இப்போதைய கதாநாயகிகள் திறமையை காட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நானும் அப்படித்தான். கதை பிடித்து இருந்தால் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கிறேன்.’’

  இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
  ×