search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye liner"

    • தற்போது பலபெண்கள் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அழகாகத்தெரிவது பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும்.

    இன்று நடிகைகளுக்கு இணையாக பல பெண்களும் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் அழகை மெருகேற்றுவதில் தணியாத விருப்பம் கொண்டுள்ளனர். குடும்ப நிகழ்வானாலும் சரி, பொது நிகழ்வானாலும் சரி, தேவதை போல தோன்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாம் அழகாக காட்சியளிக்கிறோம் என்ற உணர்வு, பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும். எனவே ஒப்பனை நாட்டத்தில் தவறில்லை.

     ஆனால் பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கண்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரவங்கள். சஸ்பென்சன்ஸ், பைன் பவுடர், கிளிட்டர் போன்ற கண் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. இவற்றை தவறான முறையில் பயன்படுத்தினால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். உதாரணத்துக்கு, ஐ லைனர், காஜல் போன்றவற்றை தவறாக பயன்படுத்துகையில் கண் இமை சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படலாம்.

     கண் இமை அழற்சிக்கும் வழிவகுக்கக்கூடும். மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றை பயன்படுத்தும் போது விழி வெண்படல சிராய்ப்பு, விழிப்பாவை, கண் நிறமி பாதிப்பு போன்றவை நேரலாம். கண் தொற்று நோய்கள் உண்டாகக்கூடும். 'ஐ லாஷ்' எனப்படும் செயற்கை கண்ணிமை முடிகள், வேதிப் பசைகளை பயன்படுத்தி இமையுடன் இணைக்கப்படுவதால் சருமத்துக்கு எரிச்சலை தரக்கூடும். ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடும்.

     தற்போது சில பெண்கள் 'கான்டாக்ட் லென்சு'களையும் அழகுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இது தூய்மையாக இல்லாவிட்டால், கண் தொற்று போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'கான்டாக்ட் லென்சை மாற்றி பயன்படுத்த வேண்டும். தினமும் அதற்கான கரைசலை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும். கான்டாக்ட் லென்சுடன் தூங்கக்கூடாது. ஒப்பனையை கலைக்கும் முன் லென்சை அகற்றிவிட வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

    கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு அதிகரித்து காட்டும்.
    உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண். கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. இளம் பெண்களின் மத்தியில் டிரெண்டாகும் வில் போன்ற ஐ லைனர்.

    பொதுவாக கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும்.

    பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால், ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போடமுடியாது.



    பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

    இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.

    ஐ லைனர், ஐ ஷேடோ போடும்போது கையில் நடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனை 3 எளிய வழிகளில் நீக்கிவிடலாம். ஒரு சேரில் வசதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். வாட்டமான இடத்தில் கை முட்டியை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை நடுக்காமல் இருக்க தாடை பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டால் ஆட்டம் இல்லாமல் ஐ லைனர் போடலாம்.

    ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது.

    கண் சீலர் அல்லது பிரைமர் பயன்படுத்தாவிட்டால் ஐ லைனர் கண்ணுக்கு கீழ் கசிந்து அழகை பாழாக்கிவிடும்.
    ×