search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellerys"

    • பீரோவை திறந்து கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டாம்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது27). என்ஜினீயர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு காளப்பரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது விமல்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய விமல்குமார் கதவு உடைக்க ப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.
    • பீரோவுக்குள் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மிளகாய் பொடி இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×