என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கிணத்துக்கடவு அருகே என்ஜினீயர் வீட்டில் நகைகள் கொள்ளை

- பீரோவை திறந்து கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
கோவை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டாம்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது27). என்ஜினீயர்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு காளப்பரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது விமல்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய விமல்குமார் கதவு உடைக்க ப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.