என் மலர்
நீங்கள் தேடியது "Italy couple"
- 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார்.
- மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர்.
மாமல்லபுரம்:
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் செலஞ்சீவ் (வயது 47). இவரது மனைவி பெடரிகா பிரைட் (38). இவர்களுக்கு டைஷானோ (7) என்ற மகனும், காஸ்டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கு இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். அவர் தங்கள் நாட்டில் இருந்து கொண்டு வந்த சைக்கிள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்தார். செலஞ்சீவ் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் தொட்டில் இணைத்து ஓட்டி வருகிறார்.
மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காக தாங்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்ய விரும்புவதில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சைக்கிள் மூலமாகவே நாங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இத்தாலி என்ஜினீயர் செலஞ்சீவ் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.
இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே இவர்கள் இவ்வாறு திருமணம் செய்தனர்.

எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடல் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார். இந்த ஜோடியின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.






