என் மலர்
நீங்கள் தேடியது "inspector suspended"
- வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
- கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டு 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்..
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளியில் கேரள கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும்.
சபரிமலை சீசன் ெதாடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இங்கு வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து அப்போது பணியில் இருந்த கலால்துறை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜோசப், தடுப்புஅலுவலர்கள் ரவி, ரஞ்சித், ஜேம்ஸ்மேத்யூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கலால்துறை ஆணையர் அவர்கள் 4பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதே சோதனைச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
- போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி இணை கமிஷனர் மயில்வாகனன் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
- கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நெல்லை:
பாளை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 34). இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் வைத்து ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
இந்நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர கமிஷனருமான(பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டராக காசிபாண்டியன் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கும், உதவி கமிஷனர் பிரதீப்புக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதுதொடர்பாக கொலை நடந்த அன்று காலை தான் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் விசாரணை நடத்தியதாகவும், அதற்கு முன்பாகவே முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் குற்றம் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.






