search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In court"

    • ஆத்தூர் அருகே பட்டா, மின் வசதி கேட்டு கோர்ட்டில் மாணவி மனு கொடுத்துள்ளேன்.
    • 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் 1-வது வார்டில் வசித்து வருபவர் சின்னப்பன். இவரது மகள் கோமதி. இவருக்கு பழனிசாமி என்பவருடன் திருமணமானது. மதிஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் மதிஸ்ரீ பைத்தூரில் தாத்தா சின்னப்பன் வீட்டில் தாயுடன் வசித்து அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தனது தாத்தாவுடன் இருந்து வந்த நிலையில் இவர்களது வீட்டுக்கு இதுவரை பட்டா இல்லாததால் சுமார் 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டிற்கு மின் இணைப்பு இணைப்பதற்காக பட்டா இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சார அலுவலகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவி மதிஸ்ரீ ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தனிடம் தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

    இதுபற்றி மாணவி மதுஸ்ரீ கூறுகையில், எனது தாத்தா கட்டிய வீட்டுக்கு 40 ஆண்டுகளாக பட்டா மற்றும் மின்இணைப்பு இல்லை. இதுபற்றி மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு எங்கள் மனு மீது விசாரணை செய்து பட்டா வழங்கவும் மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். நீதிபதி ஆனந்த் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்றார்.

    ×