search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband died"

    குற்றாலம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் கணவர் இறந்ததால் மன வேதனை அடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பரமேஸ்வரி(வயது23). இவருக்கும் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சாரங்கராஜ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி சாரங்கராஜ் மின்சாரம் தாக்கி இறந்தார். இதனால் பரமேஸ்வரி மிகுந்த மன வேதனை அடைந்தார். தனது கணவரை நினைத்து அழுதபடி இருந்த அவர் தாய் வீடான ஆயிரப்பேரிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரும், சகோதரரும் பரமேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். எனினும் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பரமேஸ்வரி யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி தனது அறையில்  தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    லாரி மீது பைக் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 36). இவர் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் வந்தார்.

    மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர். தாடிக்கொம்பு அருகே உள்ள அழகு சமுத்திரப்பட்டியில் சென்று கொண்டு இருந்தபோது முன்னால் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

    இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மடியிலேயே உயிரை விட்டார். இதைப்பார்த்ததும் அவர் கதறி துடித்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அந்த லாரி நின்றதும் அதன் மீது வேகமாக மோதியதுமே விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் பைக்கை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×