search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homemade Herbal Bath Powder"

    வெயில் காலத்தில் சருமத்தில் வரும் கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களை இந்த குளியல் பொடி போக்கும். இன்று இந்த குளியல் பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப் பயறு - அரை கிலோ,
    ரோஜா இதழ் - 10 கிராம்,
    வெட்டி வேர்  - 50 கிராம்

    இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும். தினமும் இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். சருமப் பிரச்சனை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு போட்டுக் குளிக்கலாம். எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.

    பலன்கள்: சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.
    ×