search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hemant Biswa Sharma"

    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. தற்போது அசாமில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், நேற்று ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று அசாமின் பார்பேட்டா பகுதியில் நடைபயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரையின் போது அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ராகுல்காந்தி கூறியதாவது, "உங்கள் முதல்வர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் வெறுப்பையும் பரப்புகிறார். அசாமில் வெறுப்பும் பயமும் பரப்ப படும் போதெல்லாம் உங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றனர். நாட்டின் ஊழல் மிகுந்த முதல்வராக ஹேமந்த பிஸ்வா சர்மா திகழ்கிறார்.

    நீங்கள் எப்போது தொலைக்காட்சியை பார்த்தாலும் அதில் ஹேமந்த பிஸ்வா தான் தோன்றுவார். ஊடகங்கள் உங்களிடம் சொல்லும் அனைத்தும் உங்கள் முதல்வரால் அவர்களுக்கு சொல்லப்பட்டவையே. அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன. அவர் அமித் ஷாவுக்கு எதிராக எதாவது பேசினால் அடுத்த நிமிடம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்" என விமர்சித்து கூறியுள்ளார்.

    ×