என் மலர்
நீங்கள் தேடியது "helicopter shot"
- இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒரு சிறுவனின் அபாரமான பேட்டிங் திறமை ஆன்லைனில் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவை ராசா மஹர் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் சிறுவன் ஒரு பந்தை கூட பின்னால் விடாமல் அடித்து நொறுக்கிறார். நாலாபுறமும் பந்தை பறக்கவிடுகிறார். சூர்யகுமார் யாதவ் மாதிரி கையை சுழற்றி விளாசிகிறார். இதில் சில ஹெலிகாப்டர் ஷாட்டுகளும் அடங்கும்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
"பவர் ஹிட்டிங்" என்ற தலைப்புடன், இந்த வீடியோ 21 மில்லியன் பார்வைகளையும் 1.4 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் நெட்டிசன்களின் பல கருத்துக்களுடன். ஒரு பயனர் எழுதினார், "சிறிய குண்டு, பெரிய குண்டுவெடிப்பு." ராஜஸ்தான் ராயல்ஸின் ஐபிஎல் அணியில் ரியான் பராக்கை மாற்றலாம் என்று சிலர் பரிந்துரைத்தனர். மற்றொருவர் சூர்யாவை ஒத்திருப்பதாகக் கூறினார். "எதிர்கால பேட்டுக்கு நல்வாழ்த்துக்கள் என கருத்துக்களை தெரிவித்தனர்.
ராசா மஹர், தனது இன்ஸ்டாகிராமில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் திறமையான சிறுவன் அவரது மருமகன் ஆவார். ராசா தனது மருமகனின் நம்பமுடியாத பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் பல வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார்.
- இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வாங்கி கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டு, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தோனியின் ஆட்டத்தை கடைசியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் வெளிப்புறச் சுவரில் சில மாற்றங்களை தோனி செய்துள்ளார். வீடு அவரது கிரிக்கெட் பயணத்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் அவரது ஜெர்சி நம்பரான 7 மற்றும் தோனி என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் சித்தரிப்பும் சுவரின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்ம் ஒன்றில் ரஷித் கான் இடம்பிடித்துள்ள மராத்தா அரேபியன்ஸ் பாக்தூன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மராத்தா அரேபியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. 9-வது ஓவரின் கடைசி பந்தை ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அபாரமான வகையில் சிக்சருக்கு தூக்கினார்.
இந்த ஷாட் இந்திய வீரர் எம்எஸ் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அப்படியே பிரதி எடுத்ததுபோல் அமைந்தது. ரஷித் கான் அடித்த இந்த ஷாட்டை இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர். மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் ரஷித் கானின் இந்த ஷாட்டை பார்த்து மெய்சிலிர்த்து போகினர்.

மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சேவாக் விளையாடி வருகிறார். இந்தப்போட்டியில், முதலில் பேட் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 10 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்த இலக்கை துரத்திய பக்தூன்ஸ் அணி 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.
அனைவரது பாராட்டையும் பெற்ற ரஷித் கான், ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்தவர் எம்எஸ் டோனிதான் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
😍😍😍👍🏻🙏 #Helicopters#Inventer@msdhoni Bhai 👍🏻👍🏻👍🏻 @T10League@MarathaArabianspic.twitter.com/DH8RdfUnYA
— Rashid Khan (@rashidkhan_19) November 29, 2018






