search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gulf of Mannar"

    • வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் ஆய்வு நிறுவனம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதால் அங்குள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சுழல் அமைப்பு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இதேபோன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 16 சதவீதம் பவளப்பாறைகள் அழிந்தன.

    மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பூங்கா 132 வகையான பவளப்பாறைகளின் தாயகமாகவும், உலகின் பணக்கார பல்லுயிர் உருவாக்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தமிழகம் ஏற்கனவே வறண்ட வானிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பம் மற்றும் அசவுகரியமான வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெப்ப நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகளாவிய வானிலை மாதிரியும் 2024 வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கடுமையான நிலைமைகள் நீடித்தால், அது பெரும்பாலான பவளப்பாறை இனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

    வளைகுடா பகுதிகளில் பவளப்பாறைகளை தீவிரமாக கண்காணிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர் சுகந்தி தேவதாசன் என்பவர் கூறுகையில், வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய பவளப்பாறைகளில், லட்சத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மே கடைசி வாரம் முதல் ஜூன் இரண்டாவது வாரம் வரை எச்சரிக்கை நிலை-2 விடுக்கப்பட்டுள்ளது. அந்த மானின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகள் எச்சரிக்கை நிலை-1 விடப்பட்டுள்ளது.

    காற்று, மழை, சூறாவளி போன்ற உள்ளூர் காலநிலை நிலைமைகளின் மாறுபாடுகளைப் பொறுத்து இந்த கணிப்புகளில் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது என்று எஸ்.டி.எம்.ஆர்.ஐ.யின் இணை பேராசிரியர் திராவிய ராஜ் கூறினார். அண்மையில் முடிவடைந்த தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2.0-ன் போது, மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பம் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களுக்கு பிறகு படிப்படியாக அதன் பாதிப்பு நிலை மாறியது. இதன் மூலம் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பாதுகாப்புடன் இருப்பதை காட்டியது.

    இருப்பினும், 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான பவளப்பாறைகள் அழிந்தன. 2005 ஆம் ஆண்டில் 1,11,060 ஹெக்டேராக இருந்த பவளப்பாறை பகுதி 2021-ம் ஆண்டில் 6,628 ஹெக்டேராக குறைந்துள்ளது. பவளப்பாறை பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 6,628 ஹெக்டேரில், 2,631 ஹெக்டேர் தற்போது சீரழிந்த நிலையில் உள்ளது.

    அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்தபடி மன்னார் வளைகுடாவில் இன்னொரு பவள வெளுப்பு நிகழ்வு ஏற்பட்டால், உயிருள்ள பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்றால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசு வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின் றனர். இதேபோன்று தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட பகுதி மீன வர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளை குடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாது காப்புடன் நிறுத்தப்பட்டுள் ளது.

    இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வ ளைகுடா கடலோர பகுதியி லும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    அதில் குறிப்பாக சாயல் குடி, தாமரைக்குளம், உச்சிப் புளி, புதுமடம், பிரப்பன்வ லசை, நொச்சியூரணி, சுந்தர முடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் கடந்த 8-ந்தேதி கட லுக்கு சென்றுவிட்டு 9- ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்ல வில்லை.

    இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத் தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீன வர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிக ளில் நங்கூரமிட்டு நிறுத்தப் பட்டுள்ளன. 

    • மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    • கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதி ஆகும். இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் ஒன்று அரிய வகை கடல் பசுவாகும்.

    கடல் புற்களை மட்டுமே உணவாக உண்டு உயிர் வாழக் கூடியது. அரிய வகை கடல் பசுவை பாதுகாக்கும் வகையில் மீனவர்கள் பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு ஒன்று இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

    முத்துநகர் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் பசு கரையில் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அலுவலர்கள் இன்று காலை முத்துநகர் கடற்கரைக்கு வந்து இறந்து கிடந்த அரியவகை கடல் பசுவை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதில் இந்த அரியவகை கடற்பசு சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்தது. மேலும் நான்கு முதல் ஐந்து வயது வரை இந்த கடற்பசுவுக்கு இருக்கலாம் என தெரியவந்தது.

    மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதை அடுத்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அலுவலர்கள் முத்து நகர் கடற்கரை பகுதியிலேயே இறந்த கடல் பசுவை பாதுகாப்பாக மண்ணில் புதைத்தனர். 

    கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது.
    கீழக்கரை:

    கீழக்கரை கடல் பகுதியில் முத்துராஜ் நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் வலையில் இறக்கைகளுடன் அரிய வகை சிறிய ரக மீன் சிக்கியது. வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தில் இறக்கைகளுடன் கூடிய இந்த வகை மீன் ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனை பறக்கும் மீன் என்றும் அழைக்கின்றனர்.

    அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடலில் இந்த மீன் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக மீன் நீந்துவதற்கு அதன் துடுப்புகளையே பயன்படுத்தும். இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.

    கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது. அதனால் உடலை சமநிலைப்படுத்தி தனது இறக்கையை விரித்து டால்பின் போல தண்ணீரில் இருந்து மேலே எழும்பிப் பறக்கிறது.

    நீரினுள் இருக்கும்போதே பறப்பதற்கு முன் வேகமெடுத்து, நீரின் மேற்பரப்பை நோக்கி இந்த மீன் நீந்தி வரும். நீர்பரப்பை அடைந்ததும் தன் துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித்தாவும். சுமார் 20 அடி உயரம் வரை இந்த மீன் பறக்கும் என்று கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



    ×