என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor Vajubhaivala கர்நாடகா தேர்தல்"

    கர்நாடக தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில் முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். #KarnatakaElection2018 #Congress #Siddaramaiah #VajubhaiVala
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 26 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 49 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 33 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. எனினும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    குமாரசாமியை முதல் மந்திரியாக்கினால் ஆதரவு அளிக்க தயார் என தேவேகவுடா தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்த இயலாத தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை சுமார் 4 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். #KarnatakaElection2018 #Congress #Siddaramaiah #VajubhaiVala
    ×