search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "global economy"

    • 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.

    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

    உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.

    முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே கட்சி ஆட்சி முறை காரணமாக எதிர்ப்புகளின்றி திட்டங்கள் நிறைவேறி வந்தன
    • செப்டம்பர மாதம் வரை சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

    சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.

    அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது. ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.

    இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.

    சமீப சில மாதங்களாக சீன பொருளாதாரம் இறங்குமுகமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு வர்த்தகம் முன்பு இருந்ததை விட பல மடங்கு சரிவடைந்துள்ளது.

    அங்கு தொடர்ந்து குறைந்து வரும் வட்டி விகிதத்தாலும், அமெரிக்காவுடன் (முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே) தொடங்கிய புவிசார் அரசியல் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், வரும் காலங்களில் மேலும் பொருளாதாரம் மந்தமாக கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே முக்கியமான சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு நல்லுறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சமீப காலங்களாக சீனாவில் முதலீடு செய்து வந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக அங்கிருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து செல்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை குறைவதால், சீனாவிற்கு மாற்றாக பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

    கடந்த செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு அயல்நாட்டு முதலீடுகளில், சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    சீன பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உலக நாடுகளுடன் இணைந்திருப்பதால், அதன் சரிவு உலகளாவிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் நுட்பங்களில் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    உலகில் சிறு வியாபாரங்களை மேற்கொள்வோரும், சர்வதேச பொருளாதாரத்தை எட்டும் நோக்கில், ஃபேஸ்புக் நிறுவனம் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் யுக்திகளை கற்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனம் ஏற்கனவே 50 நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து 150 நகரங்களில், 48,000 கிராமங்களில் வசிக்கும் சுமார் பத்து லட்சம் பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறது. ஃபேஸ்புக் கம்யூனிட்டி பூஸ்ட் திட்டத்தின் கீழ் மக்களுக்கு டிஜிட்டல் யுக்திகளில் தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் சேவைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மக்களுக்கு எளிய முறையில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றில் பயனர்களுக்கு டிஜிட்டல் யுக்திகளுடன், தங்களது வியாபாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றிய விளக்கங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் கற்பிக்கப்படுகிறது. 



    இதன் மூலம் பயனர்களுக்கு வலைதளம் உருவாக்கும் போது ஏற்படும் பெருமளவு தொகையை தவிர்ப்பது, மொபைல் பொருளாதாரம் மூலம் சந்தைப்படுத்துவதில் அறிவை வளர்த்து கொள்வது, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரிடம் தங்களது பொருட்களை சுமார் 200 கோடி பேருக்கு கொண்டு சேர்ப்பதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    இவ்வாறு செய்வதன் மூலம் பயனரின் வியாபாரம் மற்றும் வளர்ச்சி பெறாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரமும் சேர்ந்து வளர்ச்சி பெறுகிறது. ஃபேஸ்புக் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விளம்பரம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்களுக்கு புரியும் வகையில் 14 மொழிகளில் வழங்கப்படுகிறது.
    ×