search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja sellers arrested"

    • வடமதுரை பகுதியில போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்றவரை கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    வடமதுரை:

    வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கம்பிளியம்பட்டியை சேர்ந்த விவேக்குமார்(30) என்பவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

    • ஆண்டிபட்டி போலீசார் அன்னை சத்யாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்பகுதியில கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி போலீசார் அன்னை சத்யாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள முட்புதரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மருது(27) என்பவரை கைது செய்தனர்.

    கம்பம் வடக்கு போலீசார் கோம்பை ரோடு பகுதியில் ேராந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ராஜா(40) என்பவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வத்தலக்குண்டுவில் குவிந்த வெளிமாவட்ட கஞ்சா வியாபாரிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து சிலர் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுக்கு வந்து கஞ்சா விற்பதாக ஐ.ஜி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் உசிலம்பட்டி பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நல்லதம்பி(30), தினேஷ்குமார் ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர்களிடம் 3¼ கிலோ கஞ்சா இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக வந்த வத்தலக்குண்டு பெத்தானியாபுரத்தை சேர்ந்த மவுரிஸ்குமார்(26), சரவணக்குமார்(28) ஆகியோரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களை வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    முன்னதாக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த ரமேஷ், கும்மிடிபூண்டியை சேர்ந்த வினோத் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களை கைது செய்தனர். மேலும் அழகுராஜா, பிரேம்குமார், செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் மற்றொரு வழக்கில் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த மணிகண்டன், புதுப்பட்டியை சேர்ந்த கிஷோர்பாண்டி, மோகன்ராஜ், ராமகிருஷ்ணன், தினேஷ், குணசேகரன், ஆறுமுகம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    வத்தலக்குண்டுவில் வெளிமாவட்ட நபர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும், அதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி பல இடங்களுக்கு சப்ளை செய்வதும் அதிகரித்து வருவதால் போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ‌.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கைது செய்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ‌.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் விராலிமாயன் பட்டியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 25), நிலக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (24), பெரியகுளத்தைச் சேர்ந்த கண்ணன் (25) என்பதும், ஆட்டோவில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஐ.ஜி தனிப்படையினர் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×