search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்‌குண்டுவில் குவிந்த வெளிமாவட்ட கஞ்சா வியாபாரிகள்   16 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள்.

    வத்தலக்‌குண்டுவில் குவிந்த வெளிமாவட்ட கஞ்சா வியாபாரிகள் 16 பேர் கைது

    • வத்தலக்குண்டுவில் குவிந்த வெளிமாவட்ட கஞ்சா வியாபாரிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து சிலர் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுக்கு வந்து கஞ்சா விற்பதாக ஐ.ஜி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் உசிலம்பட்டி பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நல்லதம்பி(30), தினேஷ்குமார் ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர்களிடம் 3¼ கிலோ கஞ்சா இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக வந்த வத்தலக்குண்டு பெத்தானியாபுரத்தை சேர்ந்த மவுரிஸ்குமார்(26), சரவணக்குமார்(28) ஆகியோரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களை வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    முன்னதாக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த ரமேஷ், கும்மிடிபூண்டியை சேர்ந்த வினோத் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவரவே அவர்களை கைது செய்தனர். மேலும் அழகுராஜா, பிரேம்குமார், செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் மற்றொரு வழக்கில் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த மணிகண்டன், புதுப்பட்டியை சேர்ந்த கிஷோர்பாண்டி, மோகன்ராஜ், ராமகிருஷ்ணன், தினேஷ், குணசேகரன், ஆறுமுகம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    வத்தலக்குண்டுவில் வெளிமாவட்ட நபர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும், அதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி பல இடங்களுக்கு சப்ளை செய்வதும் அதிகரித்து வருவதால் போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×