search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja dealers arrested"

    • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது 8-வது வார்டு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 21), கோட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோபிநாத் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்கிறார்கள்.
    • வடமாநிலங்களில் இருந்து பார்சலில் கஞ்சா வருகிறது.

    கோவை

    கோவை மாவட்டத்தில் கஞ்சாவிற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள்.

    மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், சூலூர்,தொண்டாமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வட்டாரங்கனில் கஞ்சா வியாபாரம் பரவலாக நடக்கிறது.

    கஞ்சா பொட்டலங்களை வீடு தேடி சென்று வழங்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். வீதியின் குறிப்பிட்ட சில இடங்களை அடையாளமாக வைத்து கஞ்சா வியாபாரம் நடக்கிறது. காலியிடம், மைதானம், புதர்காடு, பெட்டிக்கடை என பல இடங்களில் கஞ்சா வியாபாரம் நடந்து வருகிறது.

    சிலர் கஞ்சாவை மூட்டை முட்டையாக வாங்கி வந்து பதுக்கி வைத்து கிலோ கணக்கில் ரகசியமாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். சில்லரை வியாபாரிகள், கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு 20 கிராம், 50 கிராம் என பொட்டல் போட்டு விற்பனை செய்கின்றனர்.

    இதுகுறித்து புறநகர் போலீசார் கூறியதாவது:-

    இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள், வாலிபர்கள் கஞ்சா போதையை விரும்புகிறார்கள். எந்த நேரத்திலும் இவர்கள் கஞ்சாவை தேடி வருகிறார்கள். பொட்டலம் கஞ்சா ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்கிறார்கள்.

    போலீசார் ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகிறோம். சில நாட்களில் அதே பகுதியில் வேறு ஒருவர் வத்து கஞ்சா விற்பனை செய்கிறார். சிலர் வேறு தொழில் செய்கிறார்கள்.

    மில்லில் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே மில்லில் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தார். பல இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. வடமாநிலங்களில் இருந்து பார்சலில் கஞ்சா வருகிறது. இதனை எப்படி தடுப்பது? எவ்வாறு தடுப்பது என தெரியவில்லை. பல வகைகளில் கடத்தி வருகிறார்கள்.

    குறிப்பிட்ட சில பகுதிகளில் அடிக்கடி ரோந்து பணி நடத்தினால் மட்டுமே கஞ்சா வியாபாரத்தை கட்டுப்படுத்த முடிகிறது. கஞ்சா பயன்படுத்துவோர் அதிகமாகி வருவதும், கஞ்சா தடையின்றி சப்ளையாவதும் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

    • தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடைபெறுகிறது.
    • ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள், சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    ×