என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Former Minister Shunmuganathan"
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் தொகுதி அளவிலான அ.தி.மு.க. பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.
- மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.
உடன்குடி:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கம் குறித்த திருச்செந்தூர் தொகுதி அளவிலான பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி ஓன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஓன்றிய செய லாளர்கள் ராமச்சந்திரன், ராஜ்நாரா யணன், சவுந்தி ரபாண்டி, காசிராஜன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பி னர்கள் முருகேஸ்வரி ராஜ துரை, மகாராஜா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, ஊராட்சி துணைத்தலைவர்கள் ராஜ்குமார், செல்வகுமார், தலைமை நிலைய பேச்சா ளர்கள் பொன் ஸ்ரீராம், இன்பகரன், ஓன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் உடன்குடி குணசேகரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
அ.தி.மு.க. கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வில்லை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு முறையாக நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து விளையாட்டு அணியினருக்கு உபகரணங்கள், பெண்க ளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், ஜெயலலிதா பேரவை ஓன்றிய செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ்பாபு, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஓன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரெங்கன் நன்றி கூறினார்.
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.பொதுக் கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் எம்.ஜி.ஆர். பூங்கா எதிரே நேற்று நடைபெற்றது.
- முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
தூத்துக்குடி:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்க ளின் சாராம்சங்களை விளக்கி பேசும் பொதுக் கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் எம்.ஜி.ஆர். பூங்கா எதிரே நேற்று நடை பெற்றது.
கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சேவியர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்க ட்சி கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச் செல்வன், சுடலை மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பி னர் எஸ்.கே. மாரி யப்பன் ஆகி யோர் முன்னி லை வகித்த னர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலை வரும்,முன்னாள் மா வட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதா கர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். தமிழ கத்தின் பல்வேறு உரிமைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்திலே பறிபோனது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழிப்பேன் என்று சொன்ன முதல்-அமைச்சர் ஸ்டாலினால் நீட் தேர்வை ஒழிக்க முடிய வில்லை. தமிழகத்தின் உரி மைகள் காக்கப்பட மீண்டும் அ.தி. மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தலைமை நிலைய பேச்சா ளர்கள் குமுதா பெருமாள், நடராஜன் என்ற குறிச்சி சேகர், மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற் கடல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், பிரபாகர், சுதர்சன் ராஜா, முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாநகராட்சி கவு ன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், வக்கீல்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, மனுவேல் ராஜ், ஐடியல் பரமசிவம், கே.டி.சி. ஆறுமுகம், லெட்சுமணன், எம்பெருமாள், பிராங்கிளின் ஜோஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், தலைமை நிலைய பேச்சாளர் முருகா னந்தம், ஜான்சன் தேவராஜ், சுரேஷ், முத்துகிருஷ்ணன், மைதீன், வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், ஆத்திகண், அண்ணா தொழிற்சங்கம் ஜவகர், ரெயில்வே மாரியப்பன், ஆழ்வாரப்பன், மாவட்ட பிரதிநிதி விஜயன், ஹார்பர் பாண்டி, பிரபாகரன், வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், பொருளாளர் சுகுமார், ஆனந்த ராஜ், வட்ட செய லாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வட்ட செய லாளருமான மணிகண்டன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
