search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flying squard"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாள் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணமோ, அன்பளிப்போ அரசியல் கட்சியினர் கொடுக்கிறார்களா என்பது கண்காணிக்கப்படுகிறது. இரவு பகலாக பறக்கும் படையினர் கார், பஸ், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி சென்றால் கூட அவர்களை நிறுத்தி உடமைகளை ஆய்வு செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ஒரே நாளில் ரூ.11 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பணத்தை போலீசார் கைப்பற்றி கருவூலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதேபோல் 33 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடந்த வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் சிக்கியது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பூக்கடை பகுதியில் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ரூ.30 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    புரசைவாக்கத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டது. பெரம்பூரில் வக்கீல் அருள் பிரகாசம் என்பவரிடம் ரூ.4 லட்சம் கைப்பற்றப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 கிலோ தங்கம் ரூ.66 லட்சம் மற்றும் 83 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் தாரமங்கலத்தில் உள்ள ஓட்டல் அதிபரிடம் இன்று காலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சேலம் செவ்வாப்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற 13 கிலோ வெள்ளி, வாகன சோதனையில் பிடிபட்டது.

    திருச்சியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம் வாகன சோதனையில் சிக்கியது. அதில் ரூ.4½ கோடி இருந்துள்ளது. உரிய ஆவணம் இல்லாததால் கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்துடன் இன்று பிடிபட்டார்.

    தேனியில் நடந்த சோதனையில் தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகரில் நடந்த சோதனையில் முட்டை வியாபாரி குருசாமியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 64 லட்சம் கைப்பற்றப்பட்டது. 2 வேன்களில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்டது. வங்கி பணத்தை எடுத்து சென்ற போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூரை அடுத்த ஈச்சயகுடியில் நடந்த சோதனையில் வேனில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் சிக்கியது. ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றாலும் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பாபநாசம் அருகில் நடந்த சோதனையில் ரூ.8 லட்சம் சிக்கியது.

    நாகை மாவட்டம் சீர்காழியில் நடந்த வாகன சோதனையில் ராஜசேகர் என்பவரிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 45 லட்சம் சிக்கியது. கோபி செட்டிபாளையம் கோவில் உண்டியல் பணத்தை கொண்டு சென்ற போது உரிய ஆவணமின்றி பிடிபட்டது. இன்று காலையில் நம்பியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பிடிபட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 61 ஆயிரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5 லட்சத்து 27 ஆயிரமும் உரிய ஆவணம் இல்லாமல் கைப்பற்றப்பட்டது. சாத்தான்குளத்தில் அதிகாலை நடந்த வாகன சோதனையில் மணிராஜ், ஜெனிபன் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

    திருவண்ணாமலையில் நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிக்கினர். 2 வேன்களில் வந்த அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கையில் அதிக பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உரிய ஆவணத்துடன் எடுத்து செல்லலாம்.
    அரியலூர் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    செந்துறை, மார்ச். 22-

    அரியலூர் அருகே உள்ள நாச்சியார்பேட்டையில் இன்று பகலில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி இலரா தலை மையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அப் போது காருக்குள் ஏராளமான பொட்டலங்களில் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதுபற்றி காரை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளிநகைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து கருவூலத் தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அந்த நகை களை முருகன் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு ஆர் டரின் பேரில் திருச்சியில் இருந்து வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்ப டைத்தால் வெள்ளி நகை களை பெற்றுச் செல்லலாம் என்று முருகனிடம் அதிகாரி கள் தெரிவித்தனர்.

    உரிய ஆவணங்களுடன் தங்கம் உள்ளிட்ட பொருட் களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் வியாபா ரிகள் பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று அதிகாரிகளிடம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது. * * * அரியலூர் அருகே நடந்த வாகன சோதனையில் சிக்கிய ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ×