என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Number"

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #StormWarningCage
    ராமேசுவரம்:

    வடக்கு கர்நாடகா மற்றும் ராயலசீமா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  #StormWarningCage


    வட தமிழகத்தில் காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுவதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #StormWarningCage
    தூத்துக்குடி:

    கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    வட தமிழகத்தில் வானிலை சீராக இல்லாமல் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. #StormWarningCage

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #TNRains #ChennaiRains #StormWarningCage
    சென்னை:

    கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.  

    இந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



    புயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே அந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. #TNRains #ChennaiRains #StormWarningCage
    ×