என் மலர்
நீங்கள் தேடியது "Pamban Port"
- மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும்.
- கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்:
வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதையடுத்து இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதலே, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
- மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு கர்நாடகா மற்றும் ராயலசீமா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. #StormWarningCage
கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.






