search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer sacrifices"

    • சந்திரபோஸ் விவசாய கூலி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே தரங்கம்பாடி நல்லாடை, கார்குடி பகுதியை சேர்ந்தவர் (மயிலாடுதுறை மாவட்டம்) சந்திரபோஸ் (வயது64). இவர் விவசாய கூலி வேலைசெய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மனைவி ராதாவிடம் சந்திரபோஸ் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வெளியே சென்றவர் 10 மணி வரை வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர், நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலை பாலத்தில், சந்திரபோஸ், மது மற்றும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர் மூலம் ராதாவிற்கு தகவல் சென்றது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார். தொடர்ந்து, நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், ராதா, நெடுங்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.

    வேப்பூர், நவ. 16-

    வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.

    அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    ×