காரைக்கால் நெடுங்காட்டில் பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி

சந்திரபோஸ் விவசாய கூலி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார்.
காரைக்கால் நெடுங்காட்டில் பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி
Published on

புதுச்சேரி:

காரைக்கால் அருகே தரங்கம்பாடி நல்லாடை, கார்குடி பகுதியை சேர்ந்தவர் (மயிலாடுதுறை மாவட்டம்) சந்திரபோஸ் (வயது64). இவர் விவசாய கூலி வேலைசெய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மனைவி ராதாவிடம் சந்திரபோஸ் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வெளியே சென்றவர் 10 மணி வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர், நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலை பாலத்தில், சந்திரபோஸ், மது மற்றும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர் மூலம் ராதாவிற்கு தகவல் சென்றது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார். தொடர்ந்து, நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், ராதா, நெடுங்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com