search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake Facebook"

    • போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை:

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், தாம்பரம் போலீஸ் கமிஷனருமான ரவியின் பெயரில் போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

    இதற்கு முன்னரும் இதே போன்று போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டு பலர் மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • போலி முகநூல் மூலம் அரசியல் பிரமுகர்கள் குறித்து அவதூறான செய்திகளை பரப்பி வந்ததாக புகார் வந்தது.
    • முகநூல் கணக்கை முடக்கி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி(47).

    இவரது பெயர், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டம் வெல்லூரை சேர்ந்த கருப்பையா மகன் ராஜேஸ்வரன்(29) என்பவர் போலியான முகநூல் கணக்கு ெதாடங்கினார்.

    அதில் அரசியல் பிரமுகர்கள் குறித்து அவதூறான செய்திகளை பரப்பி வந்துள்ளார்.

    இதுகுறித்து கருப்புசாமி திண்டுக்கல் மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முகநூல் கணக்கை முடக்கி விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×