search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exhibitions"

    • தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும்.
    • புத்தக கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் புத்தக திருவிழா தொடங்கியது. கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்றாா். இந்த புத்தகத் திருவிழாவை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோரின் முன்னிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:- சென்னையில் மட்டும் பபாசி புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் போதாது. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, ரூ.5.60 கோடியும் ஒதுக்கியுள்ளாா்.

    நாள்தோறும் காலை 10 மணிக்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சிக்காகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாசிப்பு பழக்கம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. எனவே, புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண் .ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பபாசி தலைவர் வயிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×