என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election committies"

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் குழுக்கள் ராகுல் காந்தி ஒப்புதலுடன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ParlimentElection #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் வேலைகளை ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.

    மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களையும் செய்து வருகிறார். 

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக 9 பேர் கொண்ட மைய குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு மற்றும் 13 பேர் கொண்ட விளம்பர குழுவையும் இன்று அறிவித்துள்ளார்.

    அதன்படி, ஏ.கே.ஆண்டனி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜிவாலா, கே.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட மைய குழுவை அமைத்துள்ளார்.

    இதேபோல், சல்மான் குர்ஷித், சசி தரூர் உள்ளிட்ட 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவையும், 13 பேர் கொண்ட விளம்பர குழுவையும் அமைத்துள்ளார். #ParlimentElection #Congress #RahulGandhi
    ×