என் மலர்
நீங்கள் தேடியது "elderly attack"
தேனி:
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 80). இவரது மகன்கள் அர்ச்சுணன், தர்மலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று அர்ச்சுணன், தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் சின்னமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அர்ச்சுணனை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சேடப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 71). அதே ஊரைச் சேர்ந்த முனிசாமி (வயது 54). ராஜனின் மகன் பால்பாண்டி. திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பால்பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இதனை குத்திக்காட்டி ராஜனிடம் தகராறு செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி அவர்களை திட்டி விட்டு சென்றார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜனிடம் பிரச்சினை செய்தனர்.
சம்பவத்தன்று முனிசாமி அவரது மனைவி சீனியம்மாள் மகன் நாகேந்திரன் ஆகியோர் ராஜனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜனின் மனைவி மணித்தாயும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து முனிசாமி மற்றும் நாகேந்திரனை கைது செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (80). இவர் வீட்டு முன்பு இரவு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் 2 வாலிபர்கள் அன்னம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் அவரது கைமுறிந்தது. அவருக்கு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமநாதன். மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.






